World News

சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு நடவடிக்கைகள்; இங்கிலாந்து பரிசீலனை..!

சமூக ஊடகங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் குழந்தைகளுக்கு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசாங்கம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய குழந்தைகள் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்த, ஒன்லைனில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசு பரிசீலனை செய்து வருகின்றது.

தனிப்பட்ட சமூக ஊடக செயலிகளைப் பயன்படுத்துவதில் இரண்டு மணிநேர வரம்பு மற்றும் 22 மணி நேர ஊரடங்கு உத்தரவு ஆகியவை குறித்த பாதுகாப்புத் திட்டங்களில் உள்ளடங்கும் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது இஙகிலாந்தில் மட்டும் அதிகமானது அல்ல. உலகளாவிய அனைத்து நாடுகளிலும் சமூக ஊடகங்களைப் பார்வையிடுவதில் குழந்தைகள் ஆர்வம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button