World News
கத்தார் வான்பரப்பு மூடல்: கத்தார் ஏர்வேஸ் விமான சேவை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கத்தார் நாட்டின் வான்பரப்பு மூடப்பட்டதை அடுத்து, கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) தனது அனைத்து விமானச் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
நாட்டின் வான்பரப்பு பாதுகாப்பாக மீண்டும் திறக்கப்படுவதாக கத்தார் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை (QCAA) அறிவிக்கும் வரை இந்த இடைநிறுத்தம் தொடரும் என விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், பயணிகளின் பாதுகாப்பே தமக்கு முக்கியம் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் அடுத்தகட்ட அறிவிப்பு, மார்ச் 2-ஆம் திகதி காலை 9 மணிக்குள் (தோஹா நேரம்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் மேலதிக விபரங்களுக்கு கத்தார் ஏர்வேஸ் இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.




