World News

ஈரானிய ஆயுதப் படைகள் எந்தவொரு சூழ்நிலைக்கும் “பதிலடி கொடுக்க தயாராக” உள்ளதாக முகமது பாகர் காலிபாப் கடுமையான எச்சரிக்கை!

அமெரிக்கா தனது உத்தியோகபூர்வ அறிக்கைகள் மற்றும் கருத்துக்களை வெளியிடும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், ஈரானிய ஆயுதப் படைகள் எந்தவொரு சூழ்நிலைக்கும் “பதிலடி கொடுக்க தயாராக” உள்ளதாக ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

​இரு நாடுகளுக்கும் இடையே அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவது தொடர்பான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க துணை அதிபர் அறிவித்திருந்த நிலையில், ஈரானின் இந்த அதிரடி அறிக்கை வெளியாகியுள்ளது.

அமெரிக்கா வெளியிடும் சில கருத்துக்கள் அல்லது நிபந்தனைகள் தொடர்பில் ஈரான் அதிருப்தி அடைந்துள்ளதை வெளிப்படுத்தும் வகையில், தங்களின் இராணுவ பலம் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முழு விழிப்புடன் உள்ளதாக ஈரானின் இந்த தலைமைப் பேச்சுவார்த்தையாளர் மிகத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button