Sri Lanka News

வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24) தொடர்வதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

தமது கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை சாதகமான பதில்களை வழங்கவில்லை என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், 48 மணித்தியாலங்கள் நிறைவடைந்த பின்னரும் பணிப்பகிஷ்கரிப்பை மேலும் நீடிப்பதா என்பது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உதவியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் நோயாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சாணக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button