Sri Lanka News

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற ஹோட்டலுக்கு அபராதம்

காலாவதியான குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த தம்புள்ளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு, தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் இன்று (29) 5,10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் மாத்தளை மாவட்ட அலுவலக அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இந்த மோசடி கண்டறியப்பட்டது.

இதன்போது, 70 ரூபாய் என்ற அதிகபட்ச சில்லறை விலை கொண்ட குடிநீர் போத்தல் ஒன்றை, குறித்த ஹோட்டல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன், விற்பனை செய்யப்பட்ட அந்த குடிநீர் போத்தல்கள் காலாவதியாகி இருந்தமையும் சோதனையின் போது கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button