Sri Lanka News

காலநிலையால் வீழ்ச்சியடைந்த மீன் விலைகள்!

நாட்டில் மீன்களின் விலை குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேலியகொடை மத்திய மீன் சந்தை தொகுதி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் கடும் வெப்பமான வானிலையை அடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துள்ளமை மற்றும் மீன்பிடித்தல் குறைவடைந்துள்ளமை போன்றவையே இதற்கான காரணங்களாகும்.

இதன்படி, மீன் கிலோவொன்று 800 முதல் 1500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக பேலியகொடை மத்திய மீன் சந்தை தொகுதி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button