World News

அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவணைத் தாக்குதல்?

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று நுழைவதைத் தடுத்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததைத் தொடர்ந்து, ஜாஸ்க் தீவுக்கு அருகே போர்க்கப்பல் மீது 2 ஏவுகணைகளை தாக்கியதாக ஈரானிய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து போர்க்கப்பல் அப்பகுதியில் இருந்து திரும்பிச் சென்றுள்ளதாகவும் ஈரானிய செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் நுழைவதைத் தடுத்ததாக ஈரான் கடற்படை கூறியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சியும் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button