World News

டிக்டொக் செயலியை வாங்க தயார் – ட்ரம்ப் அறிவிப்பு

சீனாவின் டிக்டொக் செயலியை வாங்க நம்பகமான நபரை கண்டுபிடித்துவிட்டோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மூன்று முறை டிக்டொக் செயலி மீதான தடை நிறுத்திவைப்பை நீடித்த ட்ரம்ப், தற்போது புதிய அறிவிப்பொன்றை அறிவித்துள்ளார். டிக்டொக் செயலியை வாங்கும் நபரை 2 வாரங்களில் அறிமுகம் செய்வதாகவும் கூறியுள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவின் டிக்டொக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது. ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் டிக்டொக் செயலிக்கான தடையை நீக்கினார். சீன நிறுவனத்தின் டிக்டொக் செயலி அமெரிக்கர்களால் வாங்கப்பட்டு, செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்.

Related Articles

Back to top button