Sri Lanka News

மறைந்த அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரின் இறுதிக்கிரியை இன்று

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கராக பணியாற்றிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரின் இறுதிக்கிரியை இன்று (24) நடைபெறவுள்ளது.

தம்மதஸ்ஸி தேரரின் பூதவுடல், இன்று கண்டி அஸ்கிரிய பொலிஸ் விளையாட்டு மைதானத்தில், பூரண அரச அனுசரணையுடன் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் கடந்த ஜூலை 20ஆம் திகதி, கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 67.

தற்போது அவரது பூதவுடல், அஸ்கிரி மகா விகாரையின் உடுகம ஸ்ரீ புத்தரக்கித மகா தேரர் ஞாபகார்த்த மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button