Sports

மதீஷா பத்திரனா ஐபிஎல் தொடரில் இணைவதில் தாமதம்!

​ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக விளையாடவுள்ள இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா, அணியுடன் இணைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் (SLC) விளையாட்டு மருத்துவப் பிரிவின் அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னரே அவர் போட்டிகளில் பங்கேற்க முடியும்.

​அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 15 அல்லது 16-ஆம் தேதி வரை அவர் ஓய்வில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, அவர் கட்டாய உடற்தகுதி சோதனையில் தேர்ச்சி பெற்று, தடையின்மை சான்றிதழை (NOC) பெற்ற பின்னரே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இணைந்து விளையாடுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

#SocialTv #NewsUpdate #iplupdates

Related Articles

Back to top button