Sports

கத்தாரில் சர்வதேச கால்பந்து திருவிழா 2026: 25 ஆம் திகதி டிக்கெட் விற்பனை ஆரம்பம்!

கத்தாரில் மார்ச் 26 முதல் 31 வரை நடைபெறவுள்ள ‘கத்தார் கால்பந்து திருவிழா 2026’ உலகளாவிய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மார்ச் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள தொடக்க ஆட்டங்களில் முன்னணி அணிகள் மோதுகின்றன:

முதல் போட்டியில் கத்தார் – செர்பியா அணிகள் மாலை 5 மணிக்கு ஜாசிம் பின் ஹமாத் மைதானத்தில் மோதுகின்றன.

தொடர்ந்து இரவு 8 மணிக்கு நடைபெறும் மற்றொரு முக்கிய ஆட்டத்தில் சவுதி அரேபியா மற்றும் எகிப்து அணிகள் அஹ்மத் பின் அலி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்தத் திருவிழாவில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதும் வரலாற்றுச் சிறப்புமிக்க Finalissima 2026 (மார்ச் 27) போட்டியும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

இதற்கான டிக்கெட் விற்பனை பிப்ரவரி 25 முதல் roadtoqatar.qa இணையதளத்தில் ஆரம்பமாகிறது.

Related Articles

Back to top button