Accident

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்; அதிவேகத்தால் இளைஞன் பலி!

இரத்தினபுரி – பலாங்கொடை வீதியின் பத்கம்கொட சந்திக்கு அருகில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பலாங்கொடையிலிருந்து பெல்மடுல்ல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், அதிவேகம் காரணமாக வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த மின் கம்பம் ஒன்றுடன் பலமாக மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாகக் கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர் பெல்மடுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெல்மடுல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மழைக்காலங்களில் வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால், வாகனங்களைச் செலுத்தும் போது வேகத்தைக் கட்டுப்படுத்தி அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

Back to top button