News

கண்டியில் போலி நாணயத்தாள்களுடன் கைது – அச்சிடும் கருவிகள் பறிமுதல்

போலி நாணயத்தாள்களுடன் கண்டி, உடுவாவைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர், நேற்றையதினம் ஹதரலியத்த பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் ஒரு கடையில் ரூ.5,000 போலி நோட்டைப் பயன்படுத்த முயன்றதையடுத்து கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து ரூ.5,000, 500, 100 ஆகிய நோட்டுகளின் போலி பதிப்புகள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன், அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 50, 100, 500 மற்றும் 5,000 ரூபாய்க்கான போலி நாணய அச்சு தாள்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், கலகெதராவில் உள்ள அச்சிடும் இடத்திலிருந்து கணினி, பிரிண்டர் உள்ளிட்ட கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என ஹதரலியத்த பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Check Also
Close
Back to top button