Sri Lanka News

சிறுவர்களின் டிஜிட்டல் பயன்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள்: அமைச்சர் அறிவிப்பு

சிறுவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் பாலியல் சுரண்டல், இணைய அடிமைத்தனம் மற்றும் நடத்தைப் பிறழ்வுகள் போன்ற பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தவும், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டு, டிஜிட்டல் தளங்களில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கொள்கை பரிந்துரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தப் பரிந்துரைகளின்படி, 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யவும், 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யவும் முன்மொழியப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button