Sri Lanka News

சஹஸ்புர கொலை தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது

சஹஸ்புர, ஹல்கஹவத்த பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை சஹஸ்புர பொலிஸார் நேற்று (5) கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூன் 3ஆம் திகதி அதிகாலை இந்தக்கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், இக்குற்றம் தொடர்பாக சஹஸ்புர பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னரே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சஹஸ்புர பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவொன்றினால் மாதம்பிட்டிய பகுதியில் வைத்து இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பொரளை பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சஹஸ்புர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button