Sri Lanka News
சிறுபோக வேளாண்மை செய்கை விதைப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!

சிறுபோக நெற்செய்கைக்கான விதைப்பு நடவடிக்கைகள் தற்போது இடம் பெற்று வரும் நிலையில் தம்பலகாமம் கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட வயல் நிலப் பகுதிகளில் நெற் செய்கைக்காக விவசாயிகள் விதைக்கின்றனர்.
வேளாண்மை செய்கையை வாழ்வாதாரமாக கொண்ட குடும்பங்களே இங்கு காணப்படுகின்றன.
இயந்திரம் மூலமான தரையை சமப்படுத்தலின் பின் விதைப்பு நடவடிக்கை இடம் பெற்று வருகிறது.




