World News

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்காதிருக்க சீனா சம்மதம்: ட்ரம்ப் அதிரடித் தகவல்!

⭕ Social Tv News
15-04-2026

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்காதிருக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

ஹார்முஸ் நீரிணையை நிரந்தரமாகத் திறந்து வைப்பது குறித்து சீனா மகிழ்ச்சியடைவதாகவும், சீனாவுக்காகவும் உலகத்திற்காகவும் தாம் இதனைச் செய்துள்ளதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், மீண்டும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாது என்றும் அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் சில வாரங்களில் தாம் மேற்கொள்ளவுள்ள சீனப் பயணத்தின் போது, அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் தனக்கு ‘பெரிய’ மற்றும் ‘அழுத்தமான’ கட்டித்தழுவல் மூலம் வரவேற்பளிப்பார் என்றும் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

தாங்கள் இருவர் மிகவும் திறமையாகச் செயற்படுவதாகவும், சண்டையிடுவதை விட இது சிறந்தது அல்லவா? என்றும் அமெரிக்க ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்வாறாயினும், தாங்கள் இருவரும் சண்டையிடுவதிலும் மிகவும் வல்லவர்கள் என்பதை நினைவில் கொள்ளுமாறும், தேவைப்பட்டால் மற்றவர்களை விட அதனை மிகச் சிறப்பாகச் செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

✅ Follow this link to join our WhatsApp group: https://chat.whatsapp.com/ISt6ycp7HkK0PcGi48oMEy

Related Articles

Back to top button