Sri Lanka News

கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 06ஆம் திகதி 9 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 01 முதல் 15 வரையிலான பகுதிகளில் காலை 10.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை. தலவத்துகொடை, கோட்டை. இராஜகிரிய, மிரிஹான. மடிவெல, நுகேகொடை. நாவல, கொலன்னாவ, ஐடிஹெச், கொட்டிகாவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, முல்லேரியா, மஹரகம. பொரலஸ்கமுவ, தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவ உள்ளிட்ட பல பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button