News

மே மாதம் முதலாம் திகதி முதல் புதிய மாற்றம்

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டைகளை பயன்பாட்டிற்கு விடுவிக்கும் நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் இலகுவான, காகிதமற்ற மற்றும் வினைத்திறனான அனுபவத்தை உறுதி செய்யும் நோக்கில், வாகன காப்புறுதி முறையை நவீனமயமாக்கல், தேசிய டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை முன்னெடுத்தல் மற்றும் பொதுப் பாதுகாப்பை பலப்படுத்துதல் ஆகியவற்றிற்கான முக்கிய ஒரு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

மேலும், பிளாஸ்டிக் அட்டைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் முறையைப் பயன்படுத்துவதன் மூலம், இது நாடு தழுவிய ரீதியில் சுற்றாடல் நிலைத்தன்மைக்கும் பங்களிப்பு செய்யும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. R

Related Articles

Back to top button