India News

ஒரு சவரன் தங்கம் கொடுக்கப்படும் – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நாளை (08-03-2026) உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று (07-03-2026) மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த மகளிர் தின விழாவில், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்து விஜய் அறிவிப்பதாக கூறப்பட்டது. இந்த விழாவின்போது இஸ்ரோ பெண் விஞ்ஞானி கல்பனா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண் சாதனையாளர்களுக்கு தவெக தலைவர் விஜய், சால்வை அணிவித்து புத்தகங்கள் பரிசாக கொடுத்து, கை கடிகாரங்கள் அணிவித்து கெளரவித்தார்.

இந்நிலையில், மகளிருக்கான முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய்.

குடும்ப தலைவிக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் : 60 வயது வரை உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2500 ரூபாயும்,

வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும் எனவும்

பெண்கள் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம், தரமான பட்டுசேலை தாய் வீட்டில் இருந்து அண்ணன் சீராக வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.

பெண்கள், குழந்தைகள், முதியோருக்கு தனி இலாகா உருவாக்கப்படும்.

அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணமின்றி பெண்கள் பயணிக்கலாம்.
பெண்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடிக்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றம் உருவாக்கப்படும்

பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு சார்பில் ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும்கல்வி இடைநிற்றலை தவிர்க்க மாணவரின் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.15,000 வழங்கப்படும்.

பெண்கள் பாதுகாப்பிற்காக அனைத்து பொதுப்போக்குவரத்து வாகனங்களிலும் ‘ஸ்மார்ட் பேனிக் பட்டன்’ பொருத்தப்படும்

Related Articles

Back to top button