Sri Lanka News

இலங்கையில் தடையற்ற மின்சார உற்பத்தி – நிலக்கரியை இறக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையில் தடையற்ற மின்சார உற்பத்தியை உறுதி செய்யும் நோக்கில், அவசர விலைமனுகோரல் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி கப்பல்களில் முதலாவது கப்பலில் இருந்து நிலக்கரியை இறக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்மேற்கு பருவக்காற்று காலத்தின் போது கடல் சீற்றமாக இருக்கும் என்பதால், அதற்கு முன்னதாகவே நிலக்கரி கையிருப்பைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

செப்டம்பர் மாதம் வரை நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தின் செயல்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

முந்தைய கொள்முதலில் தரம் குறைந்த நிலக்கரி விநியோகிக்கப்பட்டதால் ஏற்பட்ட சிக்கல்களைத் தவிர்க்க, தற்போதைய நிலக்கரியின் தரம் மற்றும் எரிசக்தி அளவு ஆகியவை உரிய ஆய்வுகளுக்குப் பின்பே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வலுசக்தி அமைச்சின் செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபோன்சு வழங்கிய தகவலின்படி, மூன்று கப்பல்கள் ஏற்கனவே துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

ஒரு கப்பலில் உள்ள நிலக்கரியை முழுமையாக இறக்குவதற்கு சுமார் ஐந்து நாட்கள் எடுக்கும் என்பதால், அனைத்துப் பணிகளும் முறையாகத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button