News

கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினமும் (16) இலங்கையில் தங்க விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 402,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 369,900 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,238 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, இன்று மாற்றமின்றி ஒரு சீரான நிலையில் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button