Sri Lanka News

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..!

இலங்கைக்கு ஜூன் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 43 ஆயிரத்து 962 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி,

இந்தியாவில் இருந்து அதிகளவாக 12 ஆயிரத்து 362 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இது மொத்த சுற்றுலா பயணிகளின் வருகையில் 28.1 சதவீதமாகும்.

இதேவேளை, பிரித்தானியாவிலிருந்து 3 ஆயிரத்து 740 பேரும் பங்களாதேஷிலிருந்து 2 ஆயிரத்து 717 பேரும் ஜேர்மனியிலிருந்து 2 ஆயிரத்து 439 பேரும் சீனாவிலிருந்து 2 ஆயிரத்து 403 பேரும் வருகை தந்துள்ளனர்.

இதன்படி, 2025 ஆம் ஆண்டில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்து 73 ஆயிரத்து 765 ஆக அதிகரித்துள்ளது.

இதில், 2 இலட்சத்து 16 ஆயிரத்து 422 பேர் இந்தியாவிலிருந்தும் ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 285 பேர் ரஷ்யாவிலிருந்தும் ஒரு இலட்சத்து 14 பேர் பிரித்தானியாவிலிருந்தும் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button