பஸ் கட்டணங்கள் 12% ஆல் அதிகரிப்பு – குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ. 34 ஆக உயர்வு!

📌சாதாரண சேவைகள் – 100 கி.மீ – 12%
📌 100 கி.மீ அல்லது அதற்கு மேல் – 20%
📌சொகுசு பஸ் சேவைகள் – 100 கி.மீ அல்லது அதற்குக் குறைவாக 12% மற்றும் 100 கி.மீ அல்லது அதற்கு மேல் – 15%
பஸ் கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆகக் குறைந்த கட்டணம் ரூ. 30 இலிருந்து ரூ. 34 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 05 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த கட்டண திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது.
எரிபொருள் விலை மாற்றம் மற்றும் பஸ் உதிரிப்பாகங்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய பஸ் கட்டணங்களைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2026 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் நிலவும் எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் புதிய மெட்ரோ டிரான்ஸிட் பஸ்களின் இயக்கச் செலவுகள் என்பன இதில் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன.




