Sri Lanka News

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 101.9 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108.2 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இதற்கு மேலதிகமாக, முர்பன் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 103.8 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கான கப்பல் போக்குவரத்து வேகப்படுத்தப்பட்டதை அடுத்து, வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெனிசுலாவின் ஏப்ரல் மாத எண்ணெய் ஏற்றுமதி ஒரு நாளைக்கு 1.23 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்துள்ளதாக அந்த ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இது 2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த பெறுமதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button