News

மாதத்தில் இரண்டு தடவை மக்களை சந்திக்க ஏற்பாடு: வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர்!

மாதத்தில் இரண்டு தடவை மக்கள் சந்திப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வவுனியா – மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க கப்பு கொட்டுவ தெரிவித்துள்ளார்.

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களின் குறைகளை இனங்கண்டு அதனை தீர்க்கும் பொருட்டு மாதத்தில் இரண்டு நாட்கள் ‘பொதுமக்கள் குறைதீர்’ நாளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைவாக, வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் மாதத்தின் முதலாவது மற்றும் மூன்றாவது புதன் கிழமைகளில் பிரதி பொலிஸ் மா அதிபரை சந்தித்து பொது மக்கள் தமது பிரச்சனைகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button