Sports

ஈக்வடாரை சமன் செய்து வரலாற்று சாதனை

படைத்த குராசோ!2026 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவின் குரூப் ‘இ’ (Group E) பிரிவில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான மற்றுமொரு லீக் ஆட்டத்தில், வலுவான ஈக்வடார் அணியை கோல் அடிக்கவிடாமல் தடுத்து நிறுத்தி பூஜ்ஜியம்-பூஜ்ஜியம் (0-0) என்ற கணக்கில் குராசோ (Curaçao) அணி வரலாற்றுச் சமன் செய்துள்ளது.

உலகக் கிண்ண வரலாற்றில் குராசோ அணி பெறும் முதல் புள்ளி இதுவாகும்.ஆட்டம் தொடங்கிய முதலே பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஈக்வடார் அணி, குராசோ கோல் போஸ்ட்டை நோக்கி 26 ஷாட்டுகளை அடித்தது. அதில் 15 ஷாட்டுகள் இலக்கை நோக்கி பாய்ந்தன.

ஈக்வடாரின் அசுர வேகத் தாக்குதல்களை 75 சதவீத பந்து கட்டுப்பாட்டுடன் எதிர்கொண்ட குராசோ அணி, மிகச் சிறந்த தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தைச் சமன் செய்தது.

ஆட்டத்தின் போது முரட்டுத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குராசோ வீரர்களுக்கு 5 மஞ்சள் அட்டைகளும், ஈக்வடார் வீரருக்கு 1 மஞ்சள் அட்டையும் நடுவரால் காண்பிக்கப்பட்டது.இதேவேளை, இன்று இடம்பெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி அணி 2-1 என்ற கணக்கில் ஐவரி கோஸ்ட் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Related Articles

Back to top button