News

850 கிலோ பீடி இலைகளுடன் சந்தேக நபர் கைது

மினுவாங்கொட, யட்டியான பகுதியில் பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு, இராணுவ குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது, மினுவாங்கொட யட்டியான பகுதியைச் சேர்ந்த 23 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு கடற்கரை வீதி பகுதியில் லொறியொன்றில் கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 2.4 மில்லியன் மதிப்புள்ள, 28 பைகளில் அடைக்கப்பட்ட 850 கிலோ பீடி இலைகளுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button