Accident

கால்வாயொன்றில் லொறி விழுந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

ரத்தனபிட்டிய, சூரிய மல் மாவத்தையில் கழிவுப்பொருட்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியொன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் குறித்த லொறியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரலஸ்கமுவ, திவுலபிட்டிய, சூரிய மல் மாவத்தையைச் சேர்ந்த கே. டட்லி ஆனந்த என்ற 51 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பழைய கட்டிடங்களை இடிப்பது உட்பட பல்வேறு வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார், மேலும் நுகேகொட கம்சபா சந்தி பகுதியில் ஒரு கட்டிடத்தை இடித்ததில் இருந்த கழிவுகளை டிப்பர் லொறியில் ஏற்றி வேலை முற்றத்திற்கு கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button