News

பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த ஜூலை மாதத்தில் 0.3 சதவீதமாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் மறை 1.2 சதவீதமாக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அதேநேரம், கடந்த ஜூலை மாதம் 1.5 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் இந்த மாதம் சிறியளவு அதிகரித்து 2.0 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், ஜூலை மாதத்தில் மறை 1.2 சதவீதமாக இருந்த உணவல்லா பணவீக்கம் இம்மாதம் 0.8 சதவீதமாக பதிவாகியுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button