News

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ராஜினாமா

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ஏகநாயக்க ராஜினாமா செய்துள்ளார்.

அவரது ராஜினாமா கடிதம் ஏற்கனவே அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ்மா அதிபர் பதவியும் வெற்றிடமாகவுள்ளது.

அதன்படி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் தற்போது இரண்டு உறுப்பினர் பதவிகள் வெற்றிடமாக இருப்பதாக ஆணைக்குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button