News

கொழும்பு மாநகரசபையின் புதிய மேயர்

கொழும்பு மாநகர சபையின் 26ஆவது மேயராக தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வ்ரே காலி பால்தசார் இன்று (18) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கொழும்பு மாநகரசபையின் மேயர் தெரிவு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. அதில் ரகசிய வாக்கெடுப்பின் போது 07 வாக்குகள் பெரும்பான்மையைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் வ்ரே காலி பால்தசார் கொழும்பு மாநகரசபையின் மேயராக தெரிவானார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, வ்ரே காலி பால்தசார் 61 வாக்குகளைப் பெற்றார்.இந்த நிலையிலே கொழும்பு மாநகரசபையின் 26ஆவது மேயராக தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார்.

இதனடிப்படையில் கொழும்பு மாநகர சபையின் இரண்டாவது பெண் மேயராக வ்ரே காலி பால்தசார் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button