News

கத்தாரில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி கத்தார் கிளையின் சகோதரத்துவ ஒன்று கூடல்

(ஹுபைப் முஸம்மில் – கத்தார்)

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வெற்றியுடன் தொடங்கிய புதிய மறுமலர்ச்சியின் முதலாம் ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை 26ம் திகதி கத்தாரில் உறுதியுடன் முன்னோக்கி (mission unstoppable) என்ற கருப்பொருளின் கீழ் தேசிய மக்கள் சக்தி கத்தார் கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட சகோதரத்துவ ஒன்று கூடல் ஒன்று மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டாக்டர் பிரசன்ன குணசேன zoom செயலியின் ஊடாக இணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சாதித்த முன்னேற்றங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்வின் போது தேசிய மக்கள் சக்தி கத்தார் கிளையின் உறுப்பினர்களான அசங்க அவர்கள் வரவேற்புரை அற்றியதை தொடர்ந்து துலிப், தமரா சித்தாரா, குமுது பொன்சேகா ஆகியோர் சிறப்பு உரைகளை ஆற்றினர். அத்தோடு தேசிய மக்கள் சக்தி கத்தார் கிளையின் தலைவர் அனுர ஹெட்டிகொட நன்றி உரையை ஆற்றினார்.

அத்தோடு தற்போதைய அரசாங்கம் இலங்கை நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஒரு வருட காலமாக செய்து வரும் பணிகள் பற்றிய சிறப்பு காணொலியொன்றும் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் பங்கு பற்றிய ஆதரவாளர்கள், நலன்விரும்பிகளுக்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சரிடம் தமது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேட்டு தெளிவு பெரும் வாய்ப்பு வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

Related Articles

Back to top button