News

ஊழல் குற்றச்சாட்டில் ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகர் கைது

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும், முன்னாள் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலகட்டத்தில் சரித ரத்வத்தே சிரேஷ்ட ஆலோசகராக பணியாற்றியவர்.

இந்த கைது, 2015 ஆம் ஆண்டில் இலங்கை அரசு வர்த்தகக் கூட்டுத்தாபனம் மூலம் ரூ. 90 மில்லியனுக்கும் அதிகமான செலவில் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் 50 தற்காலிக கிடங்குகளை கொள்முதல் செய்வது தொடர்பான விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button