News

கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு அதிபர்கள் எதிர்ப்பு – தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்க தீர்மானம்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு அதிபர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய ஆபத்துக்கள் காணப்படும் இடங்கள் பாடசாலை சூழலில் அடையாளம் காணப்பட்டால் அதிபர்கள் அதன் பொறுப்பினை ஏற்க வேண்டுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு அதிபர்கள் தர அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அரச அதிகாரிகளை பலி கொடுக்கும் வகையிலான நடவடிக்கைக்கு எதிராக அதிபர்கள் எதிர்வரும் 15ம் திகதியின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

2025 ஜூன் 9 வரை, இலங்கை முழுவதும் 25,055 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், மேலும் 13 மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

நாட்டில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்களினால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button