Sri Lanka News

எரிபொருள் விநியோகத்தில் அதிரடி மாற்றம்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் மற்றும் உள்நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருள் தேவை காரணமாக, இலங்கை அரசாங்கம் மிக முக்கியமான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
நாளை, மார்ச் 19ஆம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்க அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள QR குறியீட்டு முறைமையுடன் மேலதிகமாக இந்த கட்டுப்பாடும் அமுல்படுத்தப்படும்.
இதன்படி,
வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் ஒற்றை எண்களில் முடிந்தால், ஒற்றைப்படை திகதிகளில் மாத்திரம் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இறுதி இலக்கம் 0 மற்றும் இரட்டை எண்களில் முடிவடைந்தால், இரட்டைப்படை திகதிகளில் மாத்திரம் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எரிபொருள் இருப்புகளைப் பாதுகாக்கவும், நிலையங்களில் தேவையற்ற நெரிசல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமக்குரிய தினங்களில் மாத்திரம் வருகை தருமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Back to top button