Sri Lanka News

ஈரான் – அமெரிக்கா போர் விவகாரம் – தமிழரசுக்கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை – சுமந்திரன் அறிவிப்பு

ஈரான் – அமெரிக்கா போர் விவகாரம் குறித்து பச்சிலைப் பள்ளி பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இத் தீர்மானம் பச்சிளைப்பள்ளி பிரதேச சபையினால் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பது மட்டுமல்ல, இது எமது கட்சிக் கோட்பாடுகளுக்கு முரனானதும் கூட எமது ஆளுகைக்குள் இருக்கும் மற்றைய சபைத் தவிசாளர்களும் இப்படியான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்று ஏற்கனவே கட்சித் தலைவரும் நானும் அவர்களுக்கு கடுமையான உத்தரவை வழங்கியுள்ளோம்.

சர்வதேச விவகாரங்களைக் கையாள்வதற்கு வேறு மட்டங்களில் பொறுப்புள்ளவர்கள் இருக்கிறார்கள். இந்த தீர்மானமும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் எந்தப் பின்னணியில் உருவானவை என்பதை நாம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம்.

குறித்த தவிசாளர் ஏற்கனவே கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு கட்சி உறுப்புரிமையில் இருந்து இடை நிறுத்தப்பட்ட ஒருவர் என்பதும் கவனிக்கத் தக்க விடயம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button