Sri Lanka News

என்னைவிட மக்களுக்கு நன்றாகத் தெரியும் – மஹிந்த

மத்திய கிழக்கில் நிலவும் யுத்த நிலைமை காரணமாக இலங்கையின் எதிர்காலத்திற்குப் பாரிய தாக்கம் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராமயில் உள்ள விகாரை ஒன்றில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கேள்வி: தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்திற்கு ஆற்றும் சேவை குறித்து உங்களது கருத்து என்ன?பதில்: ஏதேனும் சேவை செய்கிறார்களா?

கேள்வி: பௌத்த சாசனத்தை இரண்டாம் பட்சமாகக் கருதும் நிலை காணப்படுகிறது. உங்கள் காலத்தில் எப்படி மதிப்பளிக்கப்பட்டது? பதில்: மிக உயர்வாக மதித்தோம். இப்போது அப்படிச் செய்கிறார்களா என்பது கேள்வியே.

கேள்வி: உங்கள் காலத்தில் இருந்த புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில்: அவர் ஆற்றிய சேவையைப் பாராட்ட வேண்டுமே தவிர, சிறையில் அடைக்கக் கூடாது. இது சிறையில் அடைக்கும் காலமல்ல.

கேள்வி: தற்போது சர்வதேசப் போரொன்று நடைபெற்று வருகின்றது. இன்னும் சிறிது காலம் இந்தப் போர் தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என நினைக்கிறீர்கள்? பதில்: பிரச்சினை ஏற்படும் தானே. நாட்டிற்கு, நாட்டின் எதிர்காலத்திற்குப் பிரச்சினை ஏற்படும்.

கேள்வி: நாட்டின் தற்போதைய நிலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? பதில்: அரசாங்கம் செய்வதைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. என்னைவிட மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button