Sports

இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் 30-வது லீக் போட்டியில், வெற்றி பெறுவதற்கு இலங்கை அணிக்கு 182 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்த ட்ராவிஸ் ஹெட் 56 ஓட்டங்களையும், மிட்செல் மார்ஷ் 54 ஓட்டங்களையும் விளாசினர். எனினும், மத்திய வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், அந்த அணியால் 200 ஓட்டங்களைக் கடக்க முடியாமல் போனது. ஜோஷ் இங்கிலிஸ் 27 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் துஷான் ஹேமந்த 3 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். குறிப்பாக, போட்டியின் பிற்பகுதியில் இலங்கைச் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

இதேவேளை, வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண 0.4 ஓவர்கள் வீசிய நிலையில் ஏற்பட்ட உபாதை காரணமாகப் போட்டியிலிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button