சாய்ந்தமருது பிரதேச செயலத்தினால் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு

நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிரதேச செயலத்திற்குட்பட்ட சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் வியாழக்கிழமை இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆசீக் அவர்களின் வழிகாட்டலில் திட்ட முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் மற்றும் திட்ட உதவியாளர் என்.எம். நௌஷாத் ஆகியோரின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ முவஃபிக்கா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான ஏ. ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தலைமைப் பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், சமுர்த்தி முகாமையாளர் எஸ். றிபாயா, வலய உதவியாளர் எம்.எஸ்.எம். நௌஷாட், அபிவிருத்தி உத்தியோகத்தர் (சந்தைப்படுத்தல்) எம்.ஐ. சர்பீன் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரஜா சக்தி தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 6 லட்சம் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் இதன்போது பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.







