World News

அனைத்து தரப்பினரும் பின்வாங்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து

ஈரானுடனான இஸ்ரேலின் போரில் அமெரிக்கா இணைந்ததையடுத்து, பதற்றத்தைத் தணித்து பேச்சுவார்த்தைக்குத் திரும்ப ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட இராஜதந்திரி காஜா கல்லாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க அனுமதிக்கக்கூடாது, இது “சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்” என்று கூறியுள்ளார். இதேவேளை அனைத்து தரப்பினரும் பின்வாங்கி, பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டும், என்பதோடு நிலைமை மோசமடைவதைத் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் நாளை (23) இந் நிலைமை குறித்து விவாதிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button