புத்தாண்டுத் தொடக்கத்திலேயே மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம்: மருத்துவமனைகள் சேதம்; மக்கள் அலறல்.

மெக்சிகோவின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இன்று (3) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் போது அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் அசைந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மாநிலத் தலைநகரான சில்பான்சிங்கோவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் கட்டமைப்பு பலத்த சேதமடைந்துள்ளது.
இதன் காரணமாக அங்கிருந்த நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
மெக்சிகோவின் தெற்கு மாநிலமான குரேரோவில் உள்ள சான் மார்கோஸ் நகருக்கு அருகில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்தது.
மெக்சிகோ பசிபிக் கடலோரப் பகுதியில் அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம் என்றாலும், புத்தாண்டுத் தொடக்கத்திலேயே ஏற்பட்டுள்ள இந்தச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்களைப் பீதியடையச் செய்துள்ளது.




