Sri Lanka News
கடலலையில் அடித்து செல்லப்பட்ட 19 வயது இளைஞன்! தீவிர தேடுதலில் ஹிக்கடுவை பொலிஸார்

ஹிக்கடுவை – தொடந்துவ கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட இளைஞன் காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்
.இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (21) மதியம் பதிவாகியுள்ளது.
காணாமல்போனவர் ரத்கம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது.
இவர் ஹிக்கடுவை கடலில் நீராடிக்கொண்டிருந்த போது கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இளைஞன் சுமார் 5 அடி 5 அங்குல உயரம், குட்டையான, சுருள் முடி கொண்டவர் எனவும், அவர் டெனிம் காற்சட்டை, கருப்பு நிற சட்டை மற்றும் ஒரு ஜோடி நீலநிற காலணிகள் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல்போன இளைஞனை கண்டுபிடிக்க ஹிக்கடுவை பொலிஸார் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




