Sri Lanka News
சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளம் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு

சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளம், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் அனர்த்தத்தால் பேரழிவிற்கு உள்ளான நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
அதன்படி, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் மாவட்ட அதிகாரி ஜி. வை. பி. பெரேரா, 40,870,686 ரூபாய்க்கான காசோலையை நேற்று (22) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.




