News

நல்லூர் தேர்த்திருவிழா இன்று

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று (21) தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா கடந்த மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இதில், இன்று வியாழக்கிழமை தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது. காலை 6 மணிக்குக் காலசாந்தி பூஜையும் , 6.15 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையும் நடைபெற்று சுவாமி உள்வீதி வலம் வந்து, 7 மணியளவில் தேரில் எழுந்தருளினார்.

நாளை (22) வெள்ளிக்கிழமை தீர்த்தத் திருவிழா காலை 6.15 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையுடன் ஆரம்பமாகும். மாலை 5.30 மணிக்குக் கொடியிறக்கம் நடைபெறும்.

நாளை மறுதினம் சனிக்கிழமை (23) மாலை 5.30 மணிக்குப் பூங்காவனத் திருவிழா நடைபெறும்.

Related Articles

Back to top button