Sri Lanka News

அதிவேக நெடுஞ்சாலை மீட்பு பணிகளில் விமானப்படை இணைப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை விமானப்படை அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி முதல் இந்த மீட்பு நடவடிக்கைகள் இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் நளின் ஹேவக்கும்புர தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்த மீட்புப் பணிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இதற்கமைய, கட்டுநாயக்க முதல் கொட்டாவ வரை மற்றும் கொட்டாவ முதல் மத்தள வரையான அதிவேக நெடுஞ்சாலைப் பகுதிகளில் மீட்புப் பணிகளை இலங்கை விமானப்படை மேற்கொள்ளும் அதேவேளை, மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் மீட்புப் பணிகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொள்வர்.

களனிகம, சீதுவ, குருந்துகஹஹெதக்ம, பின்னதூவ மற்றும் சூரியவெவ ஆகிய இடங்களில் இந்த மீட்புப் பணிகளுக்காக விமானப்படை அதிகாரிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக குரூப் கெப்டன் நளின் ஹேவக்கும்புர மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button