Sri Lanka News
ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு இன்று முதல் அமுல்!

ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் இன்று (20) வைப்பிலிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி சேவைகள் உட்பட அரச ஊழியர்களின் சம்பளங்கள் முதலாம் திகதியிலிருந்து மீண்டும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கிணங்க ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



