Sri Lanka News

எரிபொருள் நுகர்வில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

நாட்டில் எரிபொருள் நுகர்வு சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், புதிய பெட்ரோல் நிலையங்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மின்சார உற்பத்திக்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகளவில் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 70 சதவீத மின்சாரத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து பெறுவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக சூரிய, காற்று, நீர் மற்றும் உயிரி ஆற்றல் வளங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button