News

இலங்கையின் ஆடை ஏற்றுமதி உயர்வு – 5.2% வளர்ச்சியுடன் புதிய உச்சம்

2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது, 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி 5.2 சதவீதம் உயர்வடைந்துள்ளது என கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராச்சிய சந்தைகளில் ஏற்பட்ட வலுவான வர்த்தக இலாபம் குறிப்பிடப்படுகிறது.

இதன்படி, 2025 ஜூன் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் ஆடை ஏற்றுமதி 23.1 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், பிரித்தானியாவுக்கான ஏற்றுமதியும் 20.4 சதவீதம் உயர்ந்துள்ளது.

மேலும், 2025ஆம் ஆண்டின் முதலாரம் ஆறு மாதங்களில் மொத்தமாக இலங்கையின் ஆடை ஏற்றுமதி 8.95 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குறித்த மன்றம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button