Home இலங்கைச் செய்திகள்வரலாறு படைக்கும் கிண்ணியா மாணவி நூரி! ‘மிஷன் சக்திசாட்’ விண்வெளிப் பயிற்சிக்குத் தேர்வு; ஆகஸ்ட் 27-இல் இந்தியா பயணம்!

வரலாறு படைக்கும் கிண்ணியா மாணவி நூரி! ‘மிஷன் சக்திசாட்’ விண்வெளிப் பயிற்சிக்குத் தேர்வு; ஆகஸ்ட் 27-இல் இந்தியா பயணம்!

by Nabishad
0 comments

உலகளாவிய ரீதியில் முதன்முறையாக பெண் மாணவிகளை மட்டுமே கொண்டு விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘Mission ShakthiSAT – Phase II’ சர்வதேச விண்வெளித் தொழில்நுட்பத் திட்டத்திற்காக, இலங்கையின் திருகோணமலை மாவட்டம், கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி செல்வி முஹம்மத் நிஜாமுதீன் நூரி தேர்வாகியுள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (ISRO) நடைபெறும் விசேட பயிற்சிப் பட்டறையில் பங்கேற்பதற்காக இவர் வரும் ஆகஸ்ட் 27-ஆம் திகதி இந்தியா பயணமாகவுள்ளார்.

STEM கல்வி, விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் மேம்பாட்டை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தில், உலகளவில் 108 நாடுகளைச் சேர்ந்த 14 முதல் 18 வயதுக்குட்பட்ட 200 பெண் மாணவிகள் மட்டுமே பங்கேற்கின்றனர். இலங்கையின் முன்னணி பாடசாலைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 20 மாணவிகளுள், கிண்ணியா மண்ணின் பிரதிநிதியாக மாணவி நூரி இணைந்துள்ளதோடு, இந்த விசேட பயிற்சியின் போது மாணவிகள் இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் இந்தியப் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளனர்.

கடந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்று தற்போது விஞ்ஞானப் பிரிவில் பயின்று வரும் மாணவி நூரி, 2017 கணிதத் திறமைப் போட்டியில் தேசிய சாம்பியன், சிறுவர் தடகளத்தில் தேசிய வெண்கலப் பதக்கம், 2026 சதுரங்கப் போட்டியில் மாகாண சாம்பியன் பட்டம் வென்றதுடன், Joomla தொழில்நுட்பம் மூலம் இணையத்தளங்களை உருவாக்கும் ஆற்றலையும் கொண்டவர். இலங்கையின் விஞ்ஞான மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டத்தில் இணைந்து, நாட்டிற்கும் கிண்ணியா மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ள மாணவி செல்வி முஹம்மத் நிஜாமுதீன் நூரிக்கு ‘Social TV’ தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

#KinniyaPride #ShakthiSAT #WomenInSTEM #ISRO #KinniyaMuslimLadiesCollege #SriLankaToIndia #SocialTV #SpaceTechnology #GirlsInScience #YouthInSpace #SriLankaNews

banner

You may also like

Leave a Comment